பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆலோசனை!

நாட்டில் உள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts