பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்பட இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
கா.பொ.த சாதாரண தர மற்றும் கா.பொ.தர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரைவாக விண்ணப்பிக்குமாறு பாடசாலை அதிபர்களிடம் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.