குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் மற்றும் மேலதிக சீருடை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் ஏழு இலட்சம் மாணவர்களுக்கு மேலதிக சீருடையும் சப்பாத்துக்களும் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.
பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மேலதிக சீருடையும், சப்பாத்துக்களும் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கஷ்டப் பிரதேச மாணவர்களது பெற்றோரின் சுமையை குறைத்து மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.