பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்: கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தெரணியகல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த காப்புறுதி திட்டத்தை இதற்கமைய அடுத்த இரண்டு மாதத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நோய் வாய்ப்பட்டால் அரச வைத்தியாசலை அல்லது தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக ஒரு இலட்சம் ரூபா வரையான காப்புறுதி அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்குவதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts