பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி! அழகுக்கலை நிபுணர் கைது!

களுத்துறை , அளுத்கம பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக கருதப்படும் அழகுக்கலை நிபுணர் மற்றும் அவரிடம் மாணவர்களை அழைத்துச் சென்ற நபரொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாணவர்களின் வயது 14 மற்றும் 16 என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அழகுக்கலை நிபுணர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அழகுக்கலை நிபுணர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அவருக்கு தனியான அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் தேடிப்பார்க்காமை இத்தகைய பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

Related Posts