“மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறையை பயனுள்ளதாக கழிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்துடனேயே கல்வி அமைச்சு இந்த போட்டியை நடத்த முன்வந்துள்ளது. மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதும் இந்த போட்டி நடத்துவதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்களை கொண்ட கண்காட்சி ஒன்றும் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்சமயம் மாணவர்களிமிருந்து கோரப்படுகின்றன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதியோ அதற்கு முன்னரோ மாணவர்கள் தம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய இறுவெட்டுக்களை கல்வி அமைச்சுக்கு நேரிலோ தபால் மூலமோ ஒப்படைக்கலாம்.
இது குறித்த மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.அல்லது 071-8034633, 071-7190326, 0718283510 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.