பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து, சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் 15ம் திகதி!

அடுத்த வருடம் வழங்கப்படவுள்ள பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் என்றும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்று வரும் சுமார் 42 இலட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ன.

Related Posts