பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் நடத்தப் படுவதைத் தடைசெய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரமான காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு இன்னும் சில நாள்களில் முடிவெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரங்களிலும், தனியார் வகுப்புகளை தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. இதனால் பாடசாலைக்கு வருவதைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நிறுத்தும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் வகுப்புகளை முழுமையாகத் தடைசெய்வது குறித்து ஆராய்ந்துவருவதாகவும், எதிர்வரும் சில நாட்களில் இது தொடர்பான முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.