பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று (12) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த அபாய நிலை நீங்கியுள்ளதால், இன்று முதல் வழமை போன்று பாடசாலைகளை நடத்த முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து கிறிஸ்தவ பாடசாலைகளும் இன்று முதல் வழக்கம் போல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று முதல் பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்பட்ட போதிலும், காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிந்து கொள்வது சிறந்தது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலத்தில் சுவாச நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிந்து செல்வது சிறந்தது என சிறுவர் நல வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

Related Posts