பாடசாலை செல்லாத சிறுவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்க்க விஷேட குழுவொன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அம்பகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட அவர், அந்நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“இந்த செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்லாத காரணங்கள் இனங்காணப்பட்டு அதற்கான உதவிகளும் மேற்கொள்ளப்படும். இலங்கையில் படிக்காதவர்கள் இருக்க கூடாது என்பதற்காகவும் படித்தவர்களின் கல்வி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் வறுமை மற்றும் வேறு காரணங்களினால் பாடசாலை கல்வியை இடையில் விட்ட சிறார்களை கல்வி கற்க வைப்பதற்காகவும் இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கபடவுள்ளது” என கூறினார்.