பாடசாலை சீருடை வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிப்பு!

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அவ்வகையில் ஜனவரி 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த கால எல்லையானது தற்போது பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரையாக நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் தமக்கான சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவர்களின் நலன் கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் வவுச்சர்களுக்காக பணம் வழங்கும் அனைத்து அரச வங்கிகளுக்கும் இது தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Related Posts