பாடசாலை ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தார் கல்வி அமைச்சர்!!

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் பாடசாலைகளில் இன்று மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமையை அடுத்து, பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது கல்வி அமைச்சர் மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் தினமும் 500க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts