ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்படவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவிக்கின்றார்.
அத்துடன் மாணவர்கள் சிலரும் பாடசாலைக்கு கைத்தொலைபேசிகளை எடுத்து வருவதாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் நடவடிக்ககை எடுக்க பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வியலுவ, தல்தென நவோதய மஹா வித்தியாலயத்தில் மஹிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் கைத் தெலைபேசிகளை செயலிழக்கச் செய்து அதிபர் காரியாலயங்களில் வைக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாராவது ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்துவதுவது தெரியவந்தால் இடமாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.