பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் இணைந்துகொண்டனர் மாணவர்கள்!

நேற்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வரும் நிலையில், நேற்று பாடசாலை மாணவர்களும் இப்போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர்.

இருப்பினும் அண்மையில் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தும், அரசாங்கம் அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts