அளவுக்கு மீறி மது அருந்திய 7 பாடசாலை மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலையிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களே அளவுக்கு மீறிய மது போதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும் இதன்போது மதுபானத்தை பாடசாலையில் வைத்து அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அளவுக்கு மீறி மதுபானம், அருந்தியமையால் அவர்கள் போதையில் நிலை குலைந்த நிலையில், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் குறித்த 7 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.