“பாடசாலைக்கு பின்னரான கல்வி முறைமை” அறிமுகம்!

தற்போதுள்ள கல்வி முறைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க தற்போதய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரோயல் கல்லூரியில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இம் மாற்றத்தினை எதிர்வரும் மே மாதத்திலிருந்து அமுலுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு பின்னரான கல்வி முறைமை என்றொரு திட்டத்தினை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம். இதன் மூலம் பாடசாலை​யை முடித்த மாணவர்களுக்கு அவர்களது உயர் கல்வியை தொடர, அதற்கான தயார்படுத்தலை மேற்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். இத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி, மற்றும் உரிய அமைச்சர், அறிவியல்வாதிகள் என அனைவரிடமும் கலந்துரையாடியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் என இரண்டும் ஒன்றிணைந்து சேவையாற்ற முடியும். இத்திட்டத்திற்கென தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்கள் அமைச்சின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கென நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து சுமார் 6 சதவீதம் வரை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts