பாடசாலைக்கு அருகில் கிடந்த 13 கைக்குண்டுகள்!

கழுத்துறை மாவட்டம் பதுரலிய என்ற இடத்திலிருந்து 13 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் இருந்த பொதி ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலையின் காவலாளி வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பொதியில் கைக்குண்டுகள் இருப்பதைக்கண்டு அவர்றை மீட்டுச் சென்றனர்.

தற்போது அதுகுறித்த விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Posts