அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஏப்ரல் 20ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் பரம்பல் காரணமாக முதலாம் தவணை விடுமுறை மே 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.