மாணவர்களுடைய சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தக் கூடிய வகைகள் வகுப்பறைகள் ஒழுங்கமைக்கப்பட்டால் அனைத்துப் பாடசாலைகளை முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்துத் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும் 200 பேருக்கு அதிகமாக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த்து.
இந்த நிலையிலேயே நாடுமுழுவதுமுள்ள பாடசாலைகளில் சகல தரங்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முழுமையாக நடத்த கல்வி அமைச்சு இன்று அனுமதியளித்துள்ளது.