பாடசாலைகளுக்கு நிதியுதவி

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலுள்ள கல்வியற்கல்லூரி உட்பட ஆறு பாடசாலைகளுக்கு ஆறரை இலட்சம் ரூபாயும் ஆறு முன்பள்ளிகளுக்கு 04 இலட்சம் ரூபாயும் மாகாண சபை நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.

siththarthan_bbc

மிருசுவில் விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்திற்கு கரவெட்டி கட்டவேலி அ.மி.த.க பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும் கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும் புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் கோண்டாவில் கல்வியற் கல்லூரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.

இதே வேளை நீர்வேலி, சுன்னாகம், சித்தங்கேனி, தொல்புரம், மானிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள ஆறு முன்பள்ளிகளுக்கு 04 இலட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.

வடமாகாண சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட நிதியிலிருந்து தனக்கு ஒதுக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாயையும் பரவலாக யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்கள் இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் உட்பட 52 பொது அமைப்புக்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு பகிர்ந்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts