பாடசாலைகளுக்கு அண்மையில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பெற்றோர், ஆசிரியர் கவனமாக இருக்கவேண்டும். சந்தேகத்துக்குரிய இனிப்பு வகை விற்பனை செய்வது தொடர்பில் அறியப்படுமாயின் 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம் என நுகர்வோர் அதிகாரச்சபையின் பணிப்பாளர் சந்திரிக்கா திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
டோரா (Dora) என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இனிப்பு வகைகளை உட்கொண்ட மஹாரகம பிரதேச பாடசாலை மாணவர்கள் சிலர் நோய்வாய்ப்பட்டதையடுத்த அவ்வினிப்பு வகை பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அவ்வினிப்பில் சேர்க்கப்பட்டுள்ள நிறங்கள் பாவனைக்குகந்தவை அல்ல என்று கண்டறியப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
வட்ட வடிவில் சிவப்பு- மஞ்சள், மற்றும் பச்சை நிறங்களில் வரும் குறித்த இனிப்பு வகையில் பயன்படுத்தப்பட்டுள்ள e 123 என்ற நிறமூட்டியானது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி செய்யப்பட்டுள்ள முகவரி தவறானது என்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இனிப்புகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றும் தேடுதல் இது தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.