பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.

சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

மூவாயிரத்து 527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை க.பொ.த சாகதாரண பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.

Related Posts