பாடசாலைகளுக்கான புதிய சுகாதார விதிமுறைகள் வெளியானது!

இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக புதிய சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியா் நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானால் செயற்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளடங்கிய வழிமுறைகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts