பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

இந்த வருடத்திற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கடடமானது நிறைவடைந்திருந்தது.

எவ்வாறெனினும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போது சிறுவர்களுக்கு சிக்குன் குனியா பரவி வருவதால், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் சிறுவர்கள் இருப்பின் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை நிறுத்துமாறு சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய நாட்களில் அதிக வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீரை அருந்துவது மிகவும் அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts