பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவை புறக்கணித்தது அரசாங்கம்?

pasaiyur_Irankuturaiபாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவில் அரசாங்கம் சார்ப்பாக எவருமே கலந்துகொள்ளவில்லை. இந்த இறங்குதுறை திறப்பு விழாவினை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில், அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அமைச்சர்கள் இருவர், வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள் எவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் றொபின் மோடி இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இறங்குதுறையினை திறந்துவைத்தார்.

எவ்வாறாயினும் ஐ.ஓ.எம் நிறைவேற்றுப் பணிப்பாளர் யுசுப்பே லொபியுரே, வட மாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேள தலைவர் எமிலியாம்பிள்ளை உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

யாழ். பாசையூர் இறங்குதுறை புனரமைப்பிற்கு 158 மில்லியன் ரூபாய் நிதியினை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புனரமைப்பத் திடடம் 2 வருடங்களில் பூர்த்தியடைந்து இன்று கடற்தொழிலாளர்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts