பாசையூர் இறக்குதுறை நிர்மானப்பணிகள் துரித கதியில்

ஐ.ஓ.எம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடற்றொழில் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருமம் பாசையூர் இறக்குதுறை நிர்மாண அபவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

நீண்ட காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாசையூர் கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 50 மில்லியன் ரூபா செலவில் இந்த இறங்கு துறை புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஒரு வாரகாலத்தில் இந்த இறங்குதுறை நிர்மானப்பணிகள் நிறைவு பெறும் என்று குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

Related Posts