பாசையூரில் கடல் ஆழமாக்கும் நடவடிக்கை ஆரம்பம்

fishermenஅவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ் பாசையூர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட இறங்குதுறை நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து தற்போது கடல்பகுதி ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க பாசையூர் பகுதியில் 55 மில்லியன் ரூபா செலவில் ஐ.ஓ.எம் நிறுவனத்தினால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

440 மீற்றர் நீளம் கொண்ட இந்த இறங்குதுறை நிர்மானப்பணி நிறைவு பெற்றுள்ளதையடுத்து தற்போது கடல் ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்னும் இரண்டு வாரத்தில் இந்த ஆழமாக்கும் பணி நிறைவடைந்து கடற்தொழிலாளர்களின் பாவனைக்கு விடப்படும் என்று பாசையூர் கடற்தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts