பாசிட்டீவ் சிந்தனைகளும் யோகா பயிற்சியும் என் அழகுக்கு முக்கிய காரணம்

அருந்ததி புகழ் அனுஷ்காவுக்கு 34 வயதாகி விட்டது. கல்யாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டிலாகியிருக்க வேண்டியவர். ஆனால் இப்போதுவரை அவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

anushkka

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவரது கால்சீட்டுக்காக முன்னணி இயக்குனர்களே காத்திருக்கின்றனர். தற்போது தெலுங்கில் பாகுபலி-2வில் நடித்து வரும் அனுஷ்கா அடுத்தபடியாக பாஹ்மதியில் நடிக்கிறாராம்.

அதோடு தமிழில் அஜீத்தின் 57வது படத்தில் நடிக்கயிருப்பதாகவும் ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கிறது. இதெல்லாமே அவர் இன்னும் இளமையாக இருப்பதினால் தான் சாத்தியமாகியுள்ளது.

இந்த இளமையை அனுஷ்கா எப்படி பராமறிக்கிறார்? என்று கேட்டால், எல்லாமே பாசிட்டீவ் சிந்தனைதான் என்கிறார் அனுஷ்கா. எத்தனை பெரிய பிரச்சினைகள் என்னை சுற்றிவந்தாலும் அவற்றை நான் ஊதி தள்ளி விடுவேன். மனசை அந்த பிரச்சினைகள் பக்கம் சுற்ற விடாமல் என் கட்டுப்பாட்டிலேயே மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்கிறார்.

அதேசமயம், யோகா பயிற்சியை ஒருநாள்கூட தவற விடமாட்டேன். அந்த பயிற்சிதான் எனது உடம்பை இளமையாக வைத்திருக்கிறது. அதை பார்த்து நான் அடையும் மகிழ்ச்சி மனசில் நிறைந்திருக்கிறது. அந்த வகையில், பாசிட்டீவ் சிந்தனைகளைக்கடந்து யோகா பயிற்சியும் என் அழகுக்கு முக்கிய காரணமாகிறது என்கிறார் அனுஷ்கா.

Related Posts