பாக்முட் நகரில் முன்னேறும் ரஷ்ய படைகள்: உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்படும் அபாயம்

வாழவே தகுதியில்லாத அளவிற்கு உக்ரைனின் பல நகரங்கள் போரால் உருக்குலைந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் எல்லை நகரமான பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கைகளில் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்பட்டு விடும் என உக்ரைன் அதிபர் கவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகள் பாக்முட் நகரை கைப்பற்றிவிட்டால் கிழக்கு உக்ரைனின் க்ரமட்டோர்ஸ்க், ஸ்லோவியன்ஸ்க் உள்ளிட்ட மற்ற நகரங்களுக்குள் ரஷ்யப் படைகள் மிக எளிதாக நுழைந்துவிட முடியும். அப்படி நிலை ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்.

ஆனால் பாக்முட் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யப்படைகள் மிகத் தீவிரம் காட்டி வருகிறது. எந்த விலை கொடுத்தாவது பாக்முட் நகரை கைப்பற்ற வேண்டும் என இராணுவ அதிகாரிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கோய் சொய்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாக்முட் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. வடமேற்கு பாக்முட்டில் உள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட உலோகப் பதப்படுத்தும் ஆலைக்குள் ரஷ்ய படைகள் முன்னேறி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை பயன்படுத்தி உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தினால் ரஷ்ய துருப்புகளின் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் இங்கிலாந்து இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்டில் நடைபெற்று வரும் போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் பக்முட்டில் 24 மணி நேரத்தில் 221 மாஸ்கோ சார்பு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் கூறுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில், ரஷ்ய படைகளின் தாக்குதலால் பரந்த டொனெட்ஸ்க் பகுதியில் 210 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூற்றுக்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பக்முட் போரில் நூற்றுக்கணக்கான இராணுவ துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Related Posts