பாகுபலி-2: யானை மீது கம்பீரமாய் பிரபாஸ்

இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா பாகுபலி படம் தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது.

தற்போது பாகுபலி படத்தின் முக்கிய பணியான கிராபிக்ஸ் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் எடிட்டிங்,ட ப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பாகுபலி படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு நான்காவதாக ஒரு போஸ்டருடன் கூடிய மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அதில், பிரபாஸ் யானை மீது ஏறி நிற்கிறார். இந்த போஸ்டர் அதிகளவில் டிரெண்ட்டாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இன்னும் சில மொழிகளில் உருவாகி வரும் பாகுபலி-2 படம் வருகிற ஏப்.,28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

Related Posts