பாகிஸ்தான் ஜனாதிபதி மம்ஹூன் ஹூசைன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு சென்று திரும்புகையில் பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்தார் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.