பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது

இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

5 ஆட்டங்களை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் பாக்கிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பாக உப்புல் தரங்க 61 ஓட்டங்களையும், திஸ்ஸர பெரேரா 38 ஓட்டங்களையும் பெற்றார்கள்.

பந்து வீச்சில் ஹசன் அலி 34 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இமாம் 100 ஓட்டங்களையும், ஹவீஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related Posts