பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

முதலாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி இலங்கை தமது துடுப்பாட்டத்தின் போது 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது.

சொஹய்ப் 42 ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்காக பெற்றுக்கொடுத்த நிலையில் விக்கும் சஞ்சய 20 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Posts