பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

அபுதாபியில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராக லஹிரு திரிமான்னே கடமையாற்றவுள்ளார்.

இவர்கள் தவிர, திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரோஷென் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்சன் சந்தகன், தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு கமகே ஆகியோரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலதிக வீரர்களாக, தனஞ்சய டி சில்வா, ஜெஃப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, லஹிரு குமார மற்றும் தசுன் ஷானக ஆகியோரும் ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கிச் செல்லும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Related Posts