Ad Widget

பாகிஸ்தானிலிருந்து அனைத்து தீவிரவாத அமைப்புக்களும் அழிக்கப்படும் – பிரதமர் உறுதி

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புக்களும் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Navash-sheref-pakistan

சீன உயர்மட்ட குழுவுடனான சந்திப்பின்போது ஷெரீப் கூறியதாக பாகிஸ்தான் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிவித்த பிரதமர் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாத அனைத்து அமைப்புகளும் அழிக்கப்படும். அவற்றின் கொள்கை எத்தகையதாக இருந்தாலும் சரி, அவை எந்த மத உட்பிரிவைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, பாகுபாடின்றி தீவிரவாத அமைப்புகள் ஒழிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் கூறும்போது, “தீவிரவாதத்தை பாகிஸ்தான் மண்ணில் இருந்து வேரறுக்க பாதுகாப்புப் படை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தீவிரவாதத்தை தூண்டுபவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் அண்மையில் தெஹ்ரிக் , தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 149 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதத்தை ஒடுக்க அந்நாட்டரசு உறுதி பூண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Related Posts