பஸ் தீப்பற்றியதில் 22 பாலர் பாடசாலை சிறுவர்கள் பலி!!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகே பாலர் பாடசாலை சிறுவர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர்.

நாற்பதுக்கும் அதிகமான மாணவர்களுடன் சுற்றுலாச் சென்ற பஸ் ஒன்றே நேற்று (01) இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பஸ்ஸில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பஸ் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts