பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு?

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

குறித்த திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன் வைக்குமாறு நிதியமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்வது சம்பந்தமான தேசிய கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 01ம் திகதி கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி அடுத்த மாதம் முதல் தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டணங்கள் நுற்றுக்கு ஆறு வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

Related Posts