ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை பழைய முறைப்படி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது இதனை கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் பழைய முறைப்படி இரண்டு வினாத்தாள்கள் கொண்டதாக பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசில் கல்வி அமைச்சராக இருந்த பந்துல குணவர்த்தன ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையின் போது ஒரு வினாத்தாளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.