பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக பாடசாலையின் அதிபர்கள்

பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக பாடசாலை அதிபர்களே பதவி வகிக்க வேண்டும் என வட மாகாணக் கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக குறித்த பாடசாலையின் அதிபர்களே இருக்க வேண்டும். பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் நிதிச் செயற்பாடுகள் அரச சுற்று நிருபத்துக்கு அமைவாக இடம்பெறவேண்டும்.
இது அடுத்த வருட ஆரம்பத்தில் சகல பாட சாலைகளிலும்  நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படவேண்டும்.
இதில் அதிபரின் பொறுப்புக் கூறல் மிக முக்கியமானது எனவும் அத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts