பள்ளிப்பேருந்து மீது லாரி மோதி 24 சிறுவர்கள் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஈடா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த பேருந்து இன்று காலையில் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. ஆசாத்பூர் கிராமம் அருகே வரும் போது, திடீரென எதிர்பாரத விதமாக எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தில் இருந்த 24க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

மேலும், பல குழந்தைகள் படுகாயமடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் அந்த உத்தரவை மீறி பள்ளியை திறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமாகிட தான் பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts