திருகோணமலை இராணுவமுகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் பயன்பாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் இல்லை. பள்ளிவாசல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான பிரகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
திருகோணமலை பிரதேசத்தில் பள்ளிவாயிலொன்று உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது ஒரு புரளியாகும். குறித்த பள்ளிவாயல் 400 வருடங்கள் பழமையானது என சில பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தன இது உண்மையில்லை.
உடைக்கப்பட்டுள்ளது என்பது தவறு, புனரமைப்பு நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்று கிழக்கு மாகாண முதலமைச்சரே கூறியிருந்தார் என்றும் அவர் கூறினார்.