பளை பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சோதனை செய்த போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் காரில் இருந்து 22 கிலோவும் 80 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பிரதேசங்களை சேர்ந்த 25 மற்றும் 37 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.