பளை பகுதியில் குழு மோதல் -இருவர் கைது

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராகச் சென்ற இருவரை பளை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

பளை பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று வாள்களுடன் செல்வதாக, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த குழுவை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இதன் போது வாள்களுடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ள அதேவேளை ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பளை பொலிஸார், தப்பிச் சென்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts