பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரை அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
கடந்த மாதம் பளை பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், அப் பகுதியில் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை, விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.