பளையில் கோர விபத்து! பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை (05.07.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளை முள்ளையடி பகுதியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் யகுசிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் சென்ற குறித்த மாணவன் மீது பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாரதியை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts