வடக்கில் தென்னை உற்பத்தியை ஊக்குவித்து அதன் தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்ய சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக தென்னை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் தென்னை உற்பத்தி சபைக்குச் சொந்தமாக உள்ள 600 ஏக்கர் காணியில் இந்த விசேட திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளதாகக் தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைத் தென்னை உற்பத்தித் தொழில் துறையின் மூலம் பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.