பளைக்கான சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

train-yarl-thevyகிளிநொச்சியிலிருந்து பளை வரையான சொகுசு ரயில் சேவை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இந்த சொகுசு ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசுத் ரயில் சேவையானது கோட்டைக்கும், பளைக்கும் இடையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் தினமும் ஈடுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

கோட்டே ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் பிற்பகல், 2.25 மணியளவில் புறப்படும் இந்த சொகுசுத் ரயில் இரவு 8.28 மணியளவில் பளையை சென்றடையும்.

பளையில் இருந்து மறுநாள் காலை புறப்பட்டு இந்த ரயில் மதியம், கோட்டேயை வந்தடையும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Posts