பளுதூக்கும் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்கள் கௌரவிப்பு!

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பதங்கங்களை வென்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் நேற்று அந்தந்தப் பாடசாலைகளில் இடம்பெற்றன.

hindu weight 9664

பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவாகளுக்கு கல்லூரி மாணவர்கள், ஆசிரியாகள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று புதன்கிழமை காலை 8 மணியளவில் கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரி மைதானத்திறக்கு அழைத்து வரப்பட்ட வீராகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

பளுதுர்க்கும் போட்டியில் வடமாகாணப் பாடசாலைகள் பதினெட்டு பதக்கங்களை வென்றுள்ளபோதிலும் எட்டுப் பதக்கங்களை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் யாழ்ப்பாணம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தயாளன் மற்றும் பழைய மாணவாகளும் உரையாற்றினார்கள்.

இதேவேளை – இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 19 வயதுப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்ற யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனை டினோஜாவுக்கு கல்லூரி மாணவர்கள் ஆசிரியாகள் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

vembadi-girl-

நேற்று காலை 8 மணியளவில் கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரி மைதானத்திறக்கு அழைத்துவரப்பட்ட வீராங்கனை மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். கல்லூரி அதிபர் திருமதி ரேணுகா சண்முகரெட்ணம் தலைமையில் கௌரப்பு நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்புடைய செய்தி

அகில இலங்கை ரீதியில் பளு தூக்கும் போட்டியில் வேம்படி மாணவி சாதனை

Related Posts