பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டமானது தமது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, அரச மற்றும் மாகாண அரச சேவையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய வருகின்ற வரவுசெலவு திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு அல்லது வேதன அதிகரிப்பை கோரி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts