பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 66 பேர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட 66 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறப்படும் 4 பேரும் சூழல் மாசடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 8 பேரும் மதுபோதையில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படும் 8 பேரும் பொது இடத்தில் மது அருந்தி இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் 15 பேரும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

Related Posts